உறக்கத்தை துளைத்தேனடி
உண்பதும் மறந்தேனடி
பித்தனாய் அலைந்தேனடி – உனை
நினைப்பதொன்றையே ரசித்தேனடி;
உன் நினைவுகளின் ஈரத்தில்
இதயம் நனைந்தேனடி
உன் இமையின் அசைவில்
தொலைந்தேனடி;
உன் உடம்பின் வளைவுகளில்
வீழ்ந்தேனடி
பின் ஒரேயொரு புன்னகையில்
உயிர்த்தேனடி;
வார்த்தைகளில் காதலை
வடித்தேனடி
காதலை சொல்ல கூட
கவிதையாக மட்டுமே
கறைந்தேனடி!
——————————

























மோனையில் ஆடி சந்தத்தில் திளைகிறது உங்கள் கவிதை பெண்
காதல் ரசத்தில் ஊறிய வார்த்தைகள் அருமை ………
LikeLike
எங்கோ யாருக்காகவோ ஒவ்வொரு இதயமும் ஏங்கிக் கொண்டு தானே இருக்கிறது சரளா. அந்த இதயங்களின் கண்ணீருக்கு இக்கவிதைகள் இதமாகலாம்..
LikeLike