அன்பு வணக்கம்.. உறவுகளே..,
குவைத் ‘முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றமும்‘ மற்றும் ‘உதவும் கைகள்‘ அமைப்பும் இணைந்து நடத்தும் ரத்த தான முகாமிற்கு மனதார்ந்த நன்றியை தெரிவித்து, தங்களையும் கலந்துதவி சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன்.
நாம் கொடுக்கும் ரத்தம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் நம் உடம்பில் ஊறிப் போகும் ஆற்றலை பெற்றுள்ளவர்கள் தான் நாமெல்லோரும். பிறகு அந்த ரத்தம் வேறொரு உயிர் காக்கும் உதவியை செய்யுமெனில்; அதில் நம் ஒரு சொட்டு ரத்தமேனும் இருக்கட்டுமே.
குறைந்தது ஆறு மாதம் வரை வேறெங்கும் ரத்தம் கொடுத்திடாதவர்கள், தனக்கு தெரிந்து ‘பிறரை பாதிக்கும் எந்த ஒரு வியாதியும் இல்லாதவர்கள் மேலும் பலவீனமோ அதிக வயதில் முதிர்ச்சியோ அற்றவர்கள் கலந்துக் கொள்ளளாம், பிறரை வாழ வைக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு அழைப்பிதழ் இணைக்கப் பட்டுள்ளது. நேரம்: காலை எட்டு மணியளவிலிருந்து மதியம் ஒரு மணிவரை இருந்தாலும், உடல் சுகாதார சோதனை செய்ய வேண்டியிருப்பதால் மதியம் 12 மணிக்குள் வர கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேலும், அழைப்பிதழில், அவசர நோக்கில் ஏற்பட்ட சில தட்டச்சுப் பிழைக்கும் மன்னிப்பு கோருகிறோம்.
வாகன வசதிகள் செய்யப் பட்டுள்ளது. பாஹீல், மங்காப், பர்வானியா, அப்பாசியா போன்ற இடங்களில் வசிப்பவர்கள் மேற்குறிய தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளளாம்.
மிக்க அன்போடும்.. பெருத்த நன்றிகளுடனும்..
வித்யாசாகர்


























வாழ்த்துக்கள் அன்பரே..! தொடரட்டும் நற்பணிகள்…!
LikeLike
தங்கள் வாழ்த்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி.
இயலா நிலையிலும், இயலும் வரை தொடரும் நம் எழுத்து; தங்கள் அன்பும் அதற்கு பலமாகட்டும் ஜீ!
LikeLike