தெரு வுடைத்து
தார் பிரித்து
ஜல்லிகள் நிரப்பி
வேர்வையில் ஊறிப் போகும்
தொழிலாளிகளின்
கால் வெடிப்பும்,
வயிற்றுப் பசியும்,
தெருவோர தூசிகளில்
தூளிகட்டி –
கிழிந்த புடவியின் வழியே
அம்மா வருவாளா
தூக்கிக் கொள்வாளா எனப் பார்க்கும்
ஏக்கத்தின் தடங்களும்
தன் அடையாளங்களை
நல்ல தார்சாலையாக மட்டுமே
காட்டிக் கொண்டிருக்கின்றன!
————————————————————————
























