Monthly Archives: ஜூலை 2010

20 எப்படியோ நிகழ்கிறது காதல்..

காலங்களை கடந்தும் நிறைய மனசுகள் மாறாமலிருப்பதில்லை. மாறிப் போகும் போது மாறட்டும் என் மனசும். அதுவரை உனையே நினைத்திருக்க – உன் பார்வையை மட்டும் எனக்கு கடன் கொடு. உயிர்பிரியும் விளிம்பில் உனை மறக்கும் மனசு ஒருவேளை கிடைக்கலாம், அந்த கிடைப்பில் உன் பார்வைகளாவது மிட்ச்சப் படட்டுமடிப் பெண்ணே!! ———————————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

19 எப்படியோ நிகழ்கிறது காதல்..

இப்போதெல்லாம் நான் அதிகம் உன் நினைவோடு இருக்கிறேன்; உன்னை பற்றியே எண்ணுகிறேன்; உனை பார்ப்பதில் உன் அருகாமை கொள்வதில் முனைப்பாகிறேன்; காலத்திற்கும் நீ கிடைப்பாயா என்றே ஏங்குகிறேன்; கிடைக்காவிட்டால் என் நிலை என்ன என்றே உணராமல் எப்படி நிகழ்கிறதோ; இத்தனையும் உன்மேல்???!! ———————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

18 எப்படியோ நிகழ்கிறது காதல்..

உனக்கு ஒரு கடிதமெழுதினேன்.. கடிதத்தின் வார்த்தைகளில் எங்குமே காதலில்லை காதலிப்பதாய் சொல்லவில்லை காதல், அக்கறை மிக்கதெனில்; என் அக்கறையையும் காதலென உணர்க!! ———————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

17 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் தலையில் சூடிய மல்லிகையிலிருந்து ஒன்றிரண்டு கீழே விழுகிறது. நான் ஓடிவந்து எடுத்துவிட வில்லை. மண் இன்று அதிஷ்டம் செய்திருப்பதாய் நினைத்துக் கொண்டேன்! ————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

16 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

ஓடும் பேருந்தில் முன்னே நீ நிற்கிறாய் பின்னே நான் உனையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன் யாரோ என்னை பொருக்கி என்று சொல்வதும் உனக்குக் கேட்டிருக்கலாம் இருந்தும் நீ திரும்பிப் பார்க்காமலே தலைகுனிந்துக் கொண்டதில் தோற்றுத் தான் போனது நம் காதல்! —————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக