39 மின்சாரக் காதலியே..

சில்லறையாய் சிரிப்பவளே
செல்போனாய் அழைப்பவளே
ரிங் டோனாய் சினுங்கி சிணுங்கி
இன்பாக்ஸ் மெசேஜாக குவிந்தவளே!

டிவி போல இருப்பவளே
சீரியல் போல வளர்ந்தவளே
விளம்பரமாய் வந்து வந்து
பல சிறப்பு-நிகழ்ச்சியாக ஜொளிப்பவளே!

எஃப் எம்மை போன்றவளே
எது கேட்டாலும் தருபவளே
பாட்டை விட இனிக்க இனிக்க
நினைவு பேட்டரியால் உயிர்ப்பவளே!

லப்பு – டப்பாய் அடிப்பவளே
இதயக்கணினியை என்னுள்ளே தொலைத்தவளே
ஒரு மின்னஞ்சலும் அனுப்பாமலே யெனக்குள்
கேகா-பைட்டாய் நுழைந்தவளே!

ஆக, மின்சாரமாய் பாய்பவளே வாயேன்டி
ரெண்டு கே.பி. வார்த்தையேனும் பேசேண்டி
நீ பேசாத மௌனத்தை உடைத்துபோட
ஒரு மிஸ்டு காலு பார்வையாச்சும் பாரேண்டி!

ஃப்ரீ பெய்டு சிம்கார்டா நுழையாம
போஸ்ட்-பெய்டு காதலியா நீ வேணும்
மாதம்மாதம் கட்டிவிடும் பணம் போல
உன் ஆயுளெல்லாம் நிறைய என்னை அனுப்பிடுவேன்!
——————————————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 39 மின்சாரக் காதலியே..

  1. lakshminathan's avatar lakshminathan சொல்கிறார்:

    wife padichangala

    illana palaya memories vanthuducha

    nalla iruku,kavithai ponnu mathri ye

    lakshmi

    Like

  2. kavi's avatar kavi சொல்கிறார்:

    நன்றாக உள்ளது.
    ஆ.வி அனுப்பியாச்சா?

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அனுப்பியாச்சுப்பா.. நாம் எழுதிய எந்த கவிதையையும் உடனே அவர்களுக்கு அனுப்பித் தான் வைக்கிறோம். அவர்கள் போடுகிறார்களா இல்லையா என்பது தான் அடுத்த கேள்வி. போடுவார்கள் என்றே நம்புவோம்..

      மிக்க நன்றிப்பா…

      Like

lakshminathan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி