9, அவளால் அத்தனையும் அசைகிறது..

ம்மா தந்த
முத்தத்தைப்போல
அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு;

நிலவின் வெண்முகத்தில்
பூசிய வண்ணங்களாய் – உன்
இதழ் விரிந்து மூடும் அழகில்
ஆயிரமாயிரமாய் –
வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது;

நினைக்கையில்
நினைத்துக்கொண்டே இருக்கவும்,
நீ பேசி நான் கேட்கையில்
நீ பேசிக்கொண்டேயிருக்கவும்
மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு
உன்பின்னேயே அலைகிறது;

பிடிக்கும் என்று சொல்லாமலே
பார்ப்பது,
பார்க்கப் பார்க்க
பிடித்துவிடுவது,
பிடித்ததில் லயித்துக் கிடப்பது – என
எல்லாமே உன்னால் சாத்தியப்பட்டுவிடுகிறது;

உறக்கம் தொலைந்த
தவிப்பில்லை,
உணவை மறுக்கும் கனவுகளின்
தொல்லையில்லை,
உனை நினைக்க நினைக்க – எல்லாமே
அதுவாக நடக்கிறது; நினைவில்
அழகாக  இனிக்கிறது;

இனி நீ எனக்கு
ஆறு பிறப்பு
எழு ஜென்மதிற்கெல்லாம்
தேவையில்லை,
நான் பார்க்கும்போதெல்லாம் – எதிரே
சிரித்துக்கொண்டேயிரு போதும்!!
—————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s