ஆகாயம் தாண்டி வா..

clip-art-playing-children-466731

டிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
அழகுமயிலப் போல நீயும்
தோகை விரித் தாடிவா,

கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம்
குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம்
குச்சி தள்ளி ஓடலாம்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
நாலுபாய்ச்சல் குதிரைப்போல
துள்ளித் துள்ளி ஓடி வா,

நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம்
மூச்சடக்கி ஓடலாம்
முழுக்கடலைத் தாண்டலாம்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
ஆண்டக் கதையைப் பாடி வா
பழையவீர(ம்) ஊட்ட வா,

ஏழு கோள் எட்டு கோள் எட்டி எட்டிப் பார்க்கலாம்
கணினியில காட்டும் உலகை
வியர்வையால மறைக்கலாம்!!
—————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

ஆகாயம் தாண்டி வா.. க்கு 2 பதில்கள்

  1. தேகதாஸ் சொல்கிறார்:

    உங்களது கவிதை.கட்டுரை என்பவற்றை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது அனைத்தும்.அருமையாகவுள்ளது உங்கள் புத்தகங்களை வாசிக்கஆவலாகவுள்ளேன்

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி. சென்னை ஹிக்கிம்பாதம்ஸ் மற்றும் டிஸ்கவரி பேலஸ் புதிய புத்தக உலகம் போன்ற இடங்களிலும், இணையத்தில் நூலுலகம் மற்றும் வேறுசில இணையவழியிலும் நமது படைப்புகள் அநேகம் கிடைக்கும். படித்துவிட்டு கருத்து கூறுங்கள். காத்திருக்கிறேன். நன்றி..

      வித்யாசாகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s