பிரிவுக்குப் பின் – 26

ருபத்தி நான்கு மணி நேரத்தில்
எங்கு திரும்பினாலும் –
என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..!

காற்றின் சிறகு பிடித்து
உயிர் வரை சென்று பார்க்கையில் –
இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..!

இரவில் உறையும் உணர்ச்சிகளில்
உயிர் கொள்ளும் வழியிலும் –
எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..!

இரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின்
அனலாய் கொல்லுமென் தனிமை போரிலும் –
மீண்டும் மீண்டுமாய் ஜெயிப்பவல் நீயடி..!

காலம் கொன்று குவிக்கும் வறுமையின்
சாட்டையடிக்கு-
கடிதத்தில் மருந்திட்ட அன்புக் கவிதையும் நீயடி..!

உன் முதல் கடிதத்திலேயே –
“இப்படிக்கு உன்னவள்” என்றெழுதி..
என்னை முதன்முதலாய் புரட்டிப் போட்டவள் நீயடி..!

என்னை நீயாய் உயிர் குடித்து
நீ..நீ.. நீயெனும் போதெல்லாம்
உன்னை நானென்றும் உணரவைத்தவள் நீயடி..!

உனக்கும் எனக்குமாய் உள்ளவைகளில்
இல்லாதது – இடைவெளி மட்டுமென
பிரிவிலும் புரியவைத்தவள் நீயடி..!

இரவில் பறக்கும் விமானம் பார்த்து
என்றிந்த விமானம் எனக்காக பறக்குமென
நான் நினைக்கையில் –

வெளியே ஓடிவந்து நீ வானம் பார்த்து
இந்த விமானத்திலாவது நான் – வந்துவிட
மாட்டேனா என – வருடங்களை
நாட்கள் போல் கழிப்பவள் நீயடி!

வாரத்திற்கு ஒருமுறையேனும் அழைக்கும்
தொலைபேசியில் – ஒரேயொரு “ஹலோ” சொல்லி
ஓராயிரம் வலி தந்தவள் நீயடி!

ஒன்றுமே பேச இயலாத பொழுதிலும்
ஏதேனும் பேசி – பணம் தொலைந்து –
உயிர் தொலைந்தாவது –

உன்னை ஒரு முறையேனும் தொட்டு உயிர்த்திட
கெஞ்சியழுபவள் நீயடி!

பிறந்த பயனிற்கு இறைவன் கொடுத்திட்ட
என் பெரிய்ய்ய்ய.. பரிசு நீயடி;

இறக்கும் வரைக்குமுன் எஞ்சிய வாழ்க்கையை
விடுமுறையில் மட்டும் வந்து தீர்க்க –
நீயும் நானும் செய்த –

பெரிய்ய்ய்ய்ய்ய… பாவம் நானடி!!
————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

8 Responses to பிரிவுக்குப் பின் – 26

  1. தமிழ்த்தோட்டம்'s avatar தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

    அருமை, வாழ்த்துக்கள்

    Like

  2. செந்தில்குமார்'s avatar செந்தில்குமார் சொல்கிறார்:

    “வாரத்திற்கு ஒருமுறையேனும் அழைக்கும்
    தொலைபேசியில் – ஒரேயொரு “ஹலோ” சொல்லி
    ஓராயிரம் வலி தந்தவள் நீயடி!”

    எத்தனை அழுத்தமான வரிகள் அண்ணா
    மிகவும் அருமை

    Like

  3. siva's avatar siva சொல்கிறார்:

    ஒவொரு வரியும் மனதை கணக்கசெய்கிறது, என்ன செய்வது

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      எனை போன்ற வீடு விட்டோரின் இதயம் வெட்டும் மீளா துயரம் பிரிவின் துயரம். பதினேழு வருடமாக தந்தை தாய் தங்கை தம்பிகள் அண்ணன் நண்பர்கள் சுற்றத்தார் வீடு அருகாமை மரங்கள் செடிகள் பூக்கள் புல்வெளி ஜூலி காற்று மழை இடி மின்னல் பறவைகளென நினைவில் வெந்து வெந்து புழுங்கிய வேதனையை சொல்ல எத்தனை பிரிவுக்குப் பின் வேண்டுமோ?????

      மனைவியின் பிரிவொன்றே நிறைய பேரின் சுயம் தழுவிக் கொள்வதால்; என் மனைவிக்கென உருகி உருகி காத்திருந்து தவித்த பொழுதுகளை எனை போன்றோருக்காய் படைப்பாக்கியுள்ளேன்… சிவா!

      ஒவ்வொரு எழுத்தும் யாரோ ஒருவரின் கண்ணீராகவேனும் நிச்சையம் இருக்கும்..

      Like

பின்னூட்டமொன்றை இடுக