ஒவ்வொரு புள்ளியிலாய்
இதயங்கள் சந்தித்தே – தூர
விலகி நிற்கின்றன.
எனக்கும் நேரிடுகிறது அந்த
நெருங்கி பிரியும் புள்ளியின்
நிறைய வலிகள்.
எல்லோரையும் காதலிக்க ஆசை
எல்லோரையும் கட்டிக் கொள்ள ஆசை
கட்டல் ஏன் காமத்திற்கா?
காமம் அறுக்காத
உணர்வுகள் பொங்கியெழுந்த
ஆசையின் நிர்வாணத்திற்கு –
உடல் என்னும் சோறு போடவா???
இல்லையே… என்று நீளும்
சப்தத்தின் வீச்சு –
பிரிந்த மனங்களுக்குக்
சற்றேனும் கேட்குமா..? தெரியவில்ல.
பிரிதல்; என்ற வரையறைக்கு
என்னிடம் பேசாது புகைப்படம் பார்த்து
பேசிவிட்டுச் சென்ற – சிலரும்
அடக்கம் என்று உணர்க;
எப்படியோ அவர்கள் விட்டுச் சென்ற
கால்தடம் ஆராய்ந்ததில்
மேலே சொன்ன நிறைய புள்ளிகள்
தூர நின்றே திரும்பி சென்றதை
காட்டாமலில்லை;
ஒருவேளை
காதலெனும் பயம் கொண்டே
உறவுகள் விடுபடுகின்றனவா ..?
எனில், வேண்டாம்
நானதை கடந்து விட்டவனாய்
கை கோர்கிறேன் –
சம்மதமா உறவுகளே???
காதலென்ற வார்த்தை துறந்து
நேசிப்பென்று பெயர் வைத்து
இரண்டு கைவிரித்த இனியவனாய் காத்திருக்கிறேன்
வந்து என் இதயத்தை –
அன்பால் நிறைத்துக் கொள்வீர்களா ????
நேரிட்ட புள்ளிகள் கரைந்து
காற்றாய் போகட்டும்..
காற்றெல்லாம் நாமாய் நிறையட்டும்..
நாமாய் நிறைந்ததில்
உனக்கும் எனக்குமாய் இயங்கும் நம்
சுவாசிப்பின் கணங்கள் –
நாளைய உலகிற்கு
தமிழரின் –
இல்லை.. இல்லை.. மனிதரின் ஒற்றுமையை
பறைசாற்றி நிற்கட்டும் உறவுகளே” என்று சொல்ல எழுதிய
இந்த அறிவிப்பெப்படி கவிதையாகும்???
——————————————————————
வித்யாசாகர்
கடிதம் அருமை நண்பரே..
ஒற்றை வார்த்தை ‘அருமை’யில் வாரி அணைத்துக் கொள்ளும் நுணுக்கமில்லையா தோழர். அன்பிற்காக ஏங்கும் மனதை அன்பாலேயே நிறைப்போம். மிக்க நன்றி நல்-படைப்பாளி!!
காதலென்ற வார்த்தை துறந்து
நேசிப்பென்று பெயர் வைத்து
இரண்டு கைவிரித்த இனியவனாய் காத்திருக்கிறேன்
யாருக்காக…????..:-)
இந்த அறிவிப்பெப்படி கவிதையாகும்???
கடிதம் அழைக்கிறது தமிழரை.. இல்லை மனிதரை ..ம்ஹும்ம்ம் இணைவோம்..:-)
வணக்கம் ராதா.., உலக உயிர்களில் நீங்களும் அடக்கமெனில்; உங்களுக்காகவும் இந்த சின்ன இதயம் இரண்டு கை விரித்தே காத்திருக்கும், ஒரு அன்பு சகோதரனாய் தோழனாய். மிக உண்ணத அன்போடு..!
எப்படியோ இணைந்து விட்டீர்களே. மிக்க நன்றி என்று சொன்னால் ‘நட்ப்பிற்கு போதுமா..? தெரியவில்லை!!
சந்திப்பும் பிரிவும் நிறைந்ததே வாழ்க்கை.
வலியில்லாமல் வாழ்வில்லை
தெரியாதா நண்பனே;
எதிர்பார்ப்பும் நம்பிக்கையின்மையும் தான்
பிரிவையும் தருகின்றதோ;
நன்றி சொல்லி நகரமாட்டாயே நண்பா?
நட்புடன் நிலா..
ஆம்; நிலா. எல்லாமே வாழ்வின் யாதார்த்தங்கள் தான். ஆனால், சர்க்கரை இனிப்பெனில் இனிப்பென்று சொல்லலாம், கண்ணீர் வலியெனில் வழியென்று தானே உருகும் உள்ளம்? சந்திப்பும் பிரிவும் நிறைந்த வாழ்க்கை தானென்றாலும் பிரிகையில் வலிக்கத் தானே செய்கிறது?
இருப்பினும், ஆழ்ந்து சிந்தித்தால், நிறைய இடங்களில் கூடுதல் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்வதன் மூலம் சில பிரிவுகளையும் தவிர்க்கலாம் தான்.
மிக்க நன்றி நிலா..