ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்!!

அன்புடையீர் வணக்கம்..,

வெற்றியின் ஏக்கம் உடைத்தெறியும் தருணம் ஒவ்வொரு படைப்பாளிகளின் வியர்வைக்கும் பதில் சொல்லவே செய்கிறது. என்றோ குவைத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு சென்று அன்பு தெரிவித்ததை மனதில் கொண்டு, சென்னையில் இருந்து குவைத்திற்கு தொலைபேசியில் அழைத்து அன்பொழுக நன்றி பாராட்டி இங்ஙனமெல்லாம் ‘உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நடந்ததென்று சொல்லிமகிழ்ந்த ஓவியர் திரு.கொண்டல் ராஜின் நன்றியுணர்வு போற்றத்தக்கது மட்டுமன்று, அவரின் ஓவியங்களும் ‘மிகவும் கவரக்கூடிய அழகும், சிந்திக்கக் கூடிய கற்பனையும் நிறைந்தது என்பதை, நீங்களே இணைக்கப் பட்ட அழைப்பிதழின்படி சென்று, கண்காட்சியை கண்டு ‘ஒரு நல்ல ஓவியரை.. ‘எத்தனையோ வருடகால உழைப்பில், ‘சிரிப்பு வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியை, மனதார வாழ்த்திவிட்டு தான் வாருங்களேன்…

தோழமையுடன் கைகூப்பி அழைக்கும்…

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்!!

  1. princenrsam's avatar princenrsam சொல்கிறார்:

    நீங்கள் குறிப்பிட்ட தினங்களில் சென்னையில் இல்லை நான். இப்போது தான் மின்ஞ்சல் வழி இச்செய்தியையும் பார்த்தேன்…. எனினும் வாழ்த்துகள்!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      எனக்கு அழைத்து அழைப்பு அனுப்பியதும் பதிவிட்டுள்ளேன். மின்னஞ்சலும் செய்தேன். கூட்டம் பொருத்து நாட்கள் நீடிக்கும், எனினும் இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்குமென்று தெரிவித்திருந்தார். முடித்திருப்பார்களா என்று இன்னும் தகவலில்லை. தெரிவித்தமைக்கு நன்றி தோழமை!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி