உடைந்த கடவுள் -22

குழந்தையோடு
தாய்வீடு சென்றிருதேன்
ஒரு நாள் மட்டும் குழந்தையை
விட்டுவிட்டு போடி என்றாள் அம்மா,

ஐயோ ஒருநாளா
குழந்தையை விட்டுட்டு
ஒருநொடி கூட
இருக்க முடியாது; உயிரே போய்விடும்
என்றார் அவர்.

அம்மா நமுட்டாக சிரித்தாள்,

காலத்தின் நீதியும்
அம்மாவின் சிரிப்பும்
எனக்குப் புரிந்தது;

அவருக்கு புரியவில்லை!!
—————————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to உடைந்த கடவுள் -22

  1. கோவை கவி's avatar kovaikkavi சொல்கிறார்:

    எதுவும் எமக்குச் சொந்தமில்லை; இது புரியாமல் பித்தாகியுள்ளாயே நானும் இப்படித் தான் முன்னர் இருந்தேன்; போகப் போக புரிந்து கொள்வாய் என்று சிரித்திருப்பார் அம்மா. குழந்தைகள் எம்மிடம் வாடகைக்கு வந்தவர்கள் தானே. இது மனதில் திடமாகப் பதிந்தால் எந்தத் தடுமாற்றமும் இல்லை.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      எப்படியோ சகோதரி, ஒரு வலியை கணவனும் கணவன் குடும்பமும் நன்றாக வந்து விட்டால் இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது. நானும் சொல்கிறேன், நல்ல குடும்பப் பெண்கள் குடும்பத்தில் அடிமையாக ஒருபொழுதும் இல்லை, அவர்களின் விருப்பப் படியே வீட்டின் அத்தனை நடப்புகளும் நிகழ்கின்றன’ என்று. ஆனாலும்;

      எங்கோ முரண்பட்டு போனோம். என்னால் என் வீட்டை விட்டு என் அம்மா குடும்பம் விட்டு அவள் வீட்டிற்கு போய்விட இயலாத போது, அவள் வந்து எனக்காக என் அத்தனையையும் அனுசரித்தும் தவிர அவள் பிறந்து வளர்ந்து வந்த மொத்த பாச பந்தங்களையும் விட்டு வந்து யாரென்றே தெரியாத வீட்டில் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் முறை பழகி விட்டது நமக்கு, வாழ்ந்து வாழ்வை கடந்தும் விடுகிறோம், ஆனால் சரியா? சரியென்றே எண்ணலாம் நிறைய பேர் சொல்லலாம், அப்படித் தான் பணிக்கப் பட்டுள்ளோம்!

      மிக்க நன்றி சகோதரி, இழுத்துப் பிடித்து இரண்டாவதை விட, விட்டுக் கொடுத்து ஒன்றாக வாழலாம் என்கிறீர்கள். எல்லோருமே இங்ஙனம் நலமேனில் ‘அவன் செயல்!

      Like

  2. sarala's avatar sarala சொல்கிறார்:

    எல்லா பெண்களின் வாழ்விலும் நிகழும் நிகழ்வு இது. எத்தனை ஆழமாய் பதிவு செய்திருகிறீர்கள்
    எனக்காகவே சொன்னது போல இருந்தது அருமை கவிஞரே வாழ்வின் இயல்புகளை வார்த்தைகளில் கோர்ப்பது அத்தனை சுலபமால. ஆனால் அதை சுலபமாக்கி விட்டீர்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் கூட இந்த யதார்த்தம்தான்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சரளா, யதார்த்தம் புரியாதலில், நடிக்க நாம் நிறைய பேர் கற்றுக் கொண்டதில் தான் நிறைய வீடுகள் வெட்டு பட்டு கிடக்கின்றன. உண்மை; வீட்டின் ஒளியும் கூட!

      Like

பின்னூட்டமொன்றை இடுக