கோவிலில்
நிறைய உண்டியல்கள்
இருந்தது;
எதிலும் பணத்தை போட
விழையவில்லை நான்,
வெளியே வருகையில்
கிழிந்த கால்சட்டையும்
என்னை ஒழுகிய தலையுமான ஒரு
சிறுவனை அவசரமாக
பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போனார்
அவரின் தாய்.
அவரை அழைத்து
இதில் இவ்வளவு பணம் உள்ளது
குழந்தைக்கு நல்ல கால்சட்டை
எடுத்துக் கொள்ளுங்கள் என்று
கொடுத்தேன்;
கோவிலில் மணி அடிக்கும்
சப்தம் –
காதில் நிறைவாக கேட்டது!
———————————————————-

























இது சரி. அடிக்கடி கோயிலுக்குப் போனால் தான் நாம் நல்லவர் என்பது அல்ல. நல்லது செய்து, நல்லதை நினைத்தாலே நமது மனம் கோயில் தான். கடவுள் நம் மனதினுள்ளும் இருக்கிறார். இது தான் என் கருத்து. வாழ்த்தகள் சகோதரரே!
LikeLike
ஆம்; சகோதரி, அடிக்கடி நான் கோவில் போகவேண்டும் என்று கருத்துரைக்கவில்லையே. நம்புபவருக்கு உளம் நிறைந்து நினைத்த இடமெல்லாம் கோவிலே!!
இது கோவிலென, கோவிலை கை காட்டியது; கடவுளிங்கு இருக்கிறார் என்று நம்பிக்கையை வளர்க்க மட்டுமே. அது பற்றி அறிய, நான் சொல்லி அறிய விருப்பமெனில் நம் ‘சாமி வணக்கமுங்க’ படித்து பாருங்க. என்ற +91 96000 00952 எண்ணில் தொடர்பு கொண்டால் கிடைக்கும்.
பொதுவில் கடவுள் எங்குமிருக்கலாம். எனக்கு இருக்கிறார். கோவிலிலும்!
LikeLike