இட்லி கடை
வாசலில்
கைக்குழந்தையோடு ஒரு
பிச்சை காரி நிற்கிறாள்;
நான் கை கழுவிக் கொண்டு
அவளுக்கு ஒரு பொட்டலம்
கட்டச் சொன்னேன்,
‘நீ ஏய்யா பசியோட போற
இவளுங்க இப்படி தான், பொய்யி;
அது யார் பெத்த குழந்தையோ
இவ தூக்கிக்குனு அலையறா,
‘தா போ அங்குட்டு;
அந்த கடைக்கார தாய்
எனக்காக அவளை விரட்டினாள்,
அந்த கைக் குழந்தை
வீல் என்று கத்தியது..
‘குழந்தைகள் தான் பாவம்
இப்படி எங்கேனும் இருந்து
குழந்தை வாங்கி வருவது
நாம் சோறு போடவில்லை என்றாள்
குழந்தையை பிடித்துக் கிள்ளுவதாம்’
இப்பல்லாம் இப்படி
ஒரு கும்பலே அலைகிறதாம்,
பக்கத்து கடைக்காரர் வந்து
சொன்னார்.
யார் யார் எல்லாம் பொய்யோ
என் மெய் எனக்கு வலித்தது!
———————————————————————

























//யார் யார் எல்லாம் பொய்யோ
என் மெய் எனக்கு வலித்தது//
மிகவும் நன்று
LikeLike
மிக்க நன்றி வேணி;
பொதுவாக வயது முதிர்ந்தவர்கள் கேட்கையில் கையில் வந்தளவு கொடுப்பதும்; பழக்கத்தில் பிச்சை கேட்கும் வாலிப அல்லது இளையவர்கள் கேட்கையில் மறுத்து அவர்களிடம் ஏன் இப்படி இருக்கிறீர்களென கோபப் பட்டும், அவர்களுக்காக மண்டை வுடைத்து யோசித்தவனாய் செல்வதும் வழக்கமாயினும், ஓர்முறை ஆனந்தவிகடன் அலுவல் செல்கையில் அதன் பின்னாலிருந்த ஒரு உணவு விடுதிக்கு உணவு உண்ண சென்ற போது இப்படியும் நேர்ந்தது என்பது ‘இன்றும் கூட நினைவில் இருந்து அகலாமலே உள்ளது!
LikeLike
பிச்சை கேட்கும் வாலிப அல்லது இளையவர்கள் கேட்கையில் மறுத்து அவர்களிடம் ஏன் இப்படி இருக்கிறீர்களென கோபப்// படுவதில் நியாயம் தானே. ஒரு வேலை அவர்கள் உடல் நலக் குறைவு அற்றவர்களாக இருந்தால் நிலைமை வேறு.
LikeLike
அங்கு உதவி; நம் கடமை என எண்ணிக் கொள்வோம் சகோதரி.
என் ஒரு நாள் சோறு அவர்களுக்கு ஒரு நேர நிம்மதியினையாவது தருமெனில்; அங்ஙனம் வாய்ப்பமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வேன்!
LikeLike