ஞானமடா நீயெனக்கு (45)

நான் உன் அம்மாவிடம் பேச
தொலைபேசியில்
அவளை அழைத்தேன்;

நீ தொலைபேசியை
அவளிடமிருந்து பிடுங்கி
அப்பா அப்பா என்று
கத்தினாய்;

முதல் முறையாக
கிரஹம்பெல்லினை
மனதார பாராட்டினேன்!!
——————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஞானமடா நீயெனக்கு (45)

  1. மனோஜ்'s avatar மனோஜ் சொல்கிறார்:

    மிக அருமை…..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி மனோஜ்.

      மகனை/ மகளை தூக்கி கொஞ்சி முத்தமிடும் அந்த தாய்மையான அன்பு பிற உறவுகளின் நெருக்கத்தில் முத்தத்தில் கிடைக்க இயலாத மானசீக நெருக்கத்திற்குரியது!

      Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சகோதரி.. தனக்கே நேரமில்லா திண்டாட்டத்திலும் நமக்கு மறுமொழி இடும் பண்பு மதிப்பை தருகிறது.

      குழந்தைகளை நன்றாக வாளரக வேண்டுமே எனும் தவிப்பில் அவர்கள் செய்யும் சிறு தவறுகளை கூட இது இங்ஙனம் தவறென்று சொல்கையில் ‘அதை புரிந்துக் கொள்ளும் பக்குவத்தை குழந்தைகள் பெற்றிருப்பதில்லை தானே, நம்மை பொறுத்தவரை நல்லதுக்காக செய்கிறோம்; அவர்களை பொறுத்தவரை அடிக்கிறோம்.

      அடியென்பது, அடிப்பதை கடந்து, திட்டினாலும் சில குழந்தைகளுக்கு, அடித்தளவிற்கு உரைக்கிறது!

      Like

பின்னூட்டமொன்றை இடுக