Monthly Archives: ஜூலை 2010

உடைந்த கடவுள் – 15

செய்கூலி இல்லை சேதாரம் இல்லை பத்து சவரன் வாங்கினால் ஒரு கிராம் இலவசம்; எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே பார்க்க முடிந்தது – தெருவில் பிளாஸ்டிக் வளையல் விற்ற ஏழை பெண்ணிற்கு!! ————————————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 14

மூச்சுமுட்ட சோறு தின்று விடும் ஏப்பத்திற்கு தெரிவதில்லை பத்து நாள் பட்டினியின் கொடுமை; பத்து பைசா தட்டில் போட்டுவிட்டால் போதும் ஏப்பத்தின் சப்தம் – எல்லோருக்கும்கேட்கலாம்!! ————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 12

ஒரு ‘கிலோ’ கத்தரிக்காய் இரண்டு ரூபாய்; இரண்டு ‘கிலோ’ உப்பு ஒரு ரூபாய்; ஒரு ‘கிலோ’ பருப்பு பத்து ரூபாய்; பத்து ‘கிலோ’ அரிசி நானூறு ரூபாய் – என்று கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும் வாங்குவோருக்கும் – ‘கிலோ’ தமிழ் என்றே தெரியப் பட்டுள்ளது! ————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1) GTV – நிலவரம் நிகழ்ச்சியில்; நம் கட்டுரை!

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம், நம் “மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது” என்ற கட்டுரை ஒன்று GTV – இல் ‘நிலவரம்’ என்னும் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துப் பேசப் பட்டுள்ளது. அதன் ஒலிஒளிநாடாவும், அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப் படுகிறது.. அதோடு, தன் மிக இனிய குரலில், நல்ல உச்சரிப்பில், நம் படைப்பை … Continue reading

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எழுத எழுத இசையானாய்.. எழுதாமலே கவியானாய்.. உயிரென்று சொல்லி உறவானாய்.. உறவில் – காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று புனிதாமாகுமெனில் – அதுவாக கரைவோம் வா!! ——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக