சில்லறையாய் சிரிப்பவளே
செல்போனாய் அழைப்பவளே
ரிங் டோனாய் சினுங்கி சிணுங்கி
இன்பாக்ஸ் மெசேஜாக குவிந்தவளே!
டிவி போல இருப்பவளே
சீரியல் போல வளர்ந்தவளே
விளம்பரமாய் வந்து வந்து
பல சிறப்பு-நிகழ்ச்சியாக ஜொளிப்பவளே!
எஃப் எம்மை போன்றவளே
எது கேட்டாலும் தருபவளே
பாட்டை விட இனிக்க இனிக்க
நினைவு பேட்டரியால் உயிர்ப்பவளே!
லப்பு – டப்பாய் அடிப்பவளே
இதயக்கணினியை என்னுள்ளே தொலைத்தவளே
ஒரு மின்னஞ்சலும் அனுப்பாமலே யெனக்குள்
கேகா-பைட்டாய் நுழைந்தவளே!
ஆக, மின்சாரமாய் பாய்பவளே வாயேன்டி
ரெண்டு கே.பி. வார்த்தையேனும் பேசேண்டி
நீ பேசாத மௌனத்தை உடைத்துபோட
ஒரு மிஸ்டு காலு பார்வையாச்சும் பாரேண்டி!
ஃப்ரீ பெய்டு சிம்கார்டா நுழையாம
போஸ்ட்-பெய்டு காதலியா நீ வேணும்
மாதம்மாதம் கட்டிவிடும் பணம் போல
உன் ஆயுளெல்லாம் நிறைய என்னை அனுப்பிடுவேன்!
——————————————————————————————
வித்யாசாகர்
wife padichangala
illana palaya memories vanthuducha
nalla iruku,kavithai ponnu mathri ye
lakshmi
LikeLike
என் கவிதைகள், முக்கியமாக காதல் அவரிடம் காட்டிய பின்பே பதிக்கப் படும். முதலில் எனக்கு இப்படி பிற மொழி கலந்து கவிதையை கொச்சை படுத்துவதில் அத்தனை நாட்டமில்லை. ஆனால் ஒரு பாட்டு எழுதும் ஓடையில் இது சாயலாக முதல் நான்கு வரி மட்டும் தோன்றியது. மனைவி செல்லம்மாவிடம் காட்டினேன். அவர் தான் நல்லாருக்கே இப்படியே ஒன்னு எழுதி ஆ.வி.க்கு எழுதி போடுங்க என்றார். அதன் பின்தான் அமர்து இப்படி ஒரு காமெடிக் கவிதையை எழுதினேன் லக்ஷ்மி..
http://vidhyasaagar.com/2009/12/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/
LikeLike
நன்றாக உள்ளது.
ஆ.வி அனுப்பியாச்சா?
LikeLike
அனுப்பியாச்சுப்பா.. நாம் எழுதிய எந்த கவிதையையும் உடனே அவர்களுக்கு அனுப்பித் தான் வைக்கிறோம். அவர்கள் போடுகிறார்களா இல்லையா என்பது தான் அடுத்த கேள்வி. போடுவார்கள் என்றே நம்புவோம்..
மிக்க நன்றிப்பா…
LikeLike