உனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து
இக்கடிதத்தில் கோர்த்திடவா;
நீ அழயிருக்கும் கண்ணீரை –
கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா!
நீ வெல்லும் ஒரு சபைக்கு
நான் காலதவம் செய்திடவா;
நீ செய்த ஒரு தவரிருப்பின் –
அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா!
நீ சொல்லுமொருக் கட்டளையில்
இவ்வுலகை மாற்றி போட்டிடவா;
நீ சென்று பார்க்கும் தெருமுனையில் –
நான் மறுமுனையாய் கிடந்திடவா!
உனை காணும் அந்த பொழுதிற்கே
என் ஒற்றைபிறப்பை விற்றிடவா;
நீ பேச இயலா நாட்களிலே –
நான் காற்றிலாக உயிர் கரைத்திடவா!
என் பிறந்தபலன் எல்லாமெடுத்து
உன் ஆசைகளைப் பூர்த்தி செய்திடவா;
கடவுள் ஒன்று உண்டென்றால் –
உன் கனவை ஜெயிக்க கேட்டிடவா!
இப்படி நீளும் மடலில் கைகுவித்து
கவிதை பூக்க வாழ்த்திடவா;
நீ நீண்டூ வாழும் வாழ்க்கைக்கு –
வளமும் நலமும் கூட்டிடவா;
அம்மா அண்ணன் அண்ணிகளோடு
நட்பும் நானும் குழந்தைகளும்
தம்பியும் தங்கையுமாய் பார் சூழ –
நீ வாழ்வாங்கு வாழ வாழ்த்துவமே!!
———————————————————————
ஐப்பசி 12 – இல் பிறந்த செல்லத் தம்பி விஷ்வாவிற்கும்
கார்த்திகை 15 – இல் பிறந்த இனிய சகோதரி யமுனா பாலாவிற்கும்
மார்கழி 1 (16.12.2010)- இல் பிறந்த அன்புத் தம்பி பாலாவிற்கும்
———————————————————————
எங்களின் அன்பு குறையாத வாழ்த்துக்கள்
என்றென்றும் நிறையட்டும்!!
———————————————————————
வித்யாசாகர்
வாழ்த்துக்கள். கவிஞருக்கும்..குழந்தைகளுக்கும்.
LikeLike
வாழ்த்த நிறைய அன்பு வைத்திருக்கிறீர்கள் உமா. தாய்மையை கவிதையாலும் கெட்டிப் படுத்திக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களில் நிச்சயம் நாம் நலம் வாழ்வோமென்று நன்றிகளுடன் நம்புகிறேன் உமா…
LikeLike