Monthly Archives: பிப்ரவரி 2011

வளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்!!

அன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா? அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

செல்லம்மா வித்யாசாகரின் சிறுகதைகள்..

“தலைப்பு : பயணம்..” கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது – “கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

பெரியார் நூலகத்தின் இராவண காவியமும், பாராட்டு விழாவும்…

வெறும் சவ்வுகளாலான இதயத்தை அன்பு நிரப்பி – மனசாக்கிக் கொள்வோம்! சில நீலக் கடலின் தூரத்தை சின்ன இதயமளவில் வென்று உறவென எழுத்தாலும் முழங்குவோம்; வாழ்வின் அதிசயத்தை ஆணவமும் பொறாமையுமின்றி – உனக்காய் எனக்காய் நமக்காய் நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம்!! கால சூத்திரத்தின் கட்டப்பட்ட சூட்சுமக் கைகளை நற்சிந்தனையின் தெளிவின் கண்களோடு கண்டு … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

71, யாரையும் நோகாத கனவுகள்..

வலிக்காமல் சலிக்காமல் நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல் நிஜம் பூத்த மலர்களின் – வாசத்தொடும், வரலாறாய் மட்டும் மிகாமலும், முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் – மல்லிகைப் பூக்க, ஒற்றை நிலாத் தெரிய, மரம் செடி கொடிகளின் அசைவில் – சுகந்தக் காற்று வீசும் – தென்றல் பொழுதுகளுக்கிடையே; வஞ்சனையின்றி – உயிர்கள் அனைத்தும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

42 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும் மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்