மழை நாளும்.. மாடிவீடும்.. (50)

மழைஒழுகும் வீடு
மல்லிகை உதிர்ந்த முற்றம்
கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு
தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம்
மண்வாசத்தோடு வீசும் காற்று
மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா
வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா
புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி
டமடமவென இடிக்கும் வானம்
இருள் அடையும் பொழுது
கறுத்துச்சூழும் மேகம்
ஓரக்கண்ணால் முகம் பார்த்துக் கத்தும் காகம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்
காற்றில் கிளையாட இலைசொட்டும் மழைதேங்கிய நீர்
பசியில் பரபரக்கும் வயிறு
பள்ளிக்கு போகயிருக்குமோ இருக்காதோ எனும் படபடப்பு
மழையொழுகும் வீட்டினுள் நிரம்பிய
பாத்திரத்திலிருந்து எழும் கூரையின் வாசம்
மண் கிளறி மழையோடு நுகர்ந்த மண்வாசமென
எல்லாவற்றோடும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது மனசு..

மனதை என்னசெய்வேன்.. ?

அடுக்குமாடி கட்டிடத்தின் மேலமர்ந்துகொண்டு
மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..
———————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மழை நாளும்.. மாடிவீடும்.. (50)

  1. அ.பாண்டியன்'s avatar அ.பாண்டியன் சொல்கிறார்:

    வணக்கம் நண்பரே!
    தங்களின் ரசிப்பும் தவிப்பும் கவிதை வரிகள் அழகாக தலைநிமிர்ந்து நடைபோடுகிறது. வாழ்த்துகள் தோழரே. தொடர்க உங்கள் பணியை. நிச்சயம் பல இதயங்கள் விழித்துக்கொள்ளும் உங்கள் எழுத்தில்…
    நட்புடன்
    அ..பாண்டியன்
    http://pandianpandi.blogspot.com/

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்