22. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ என்னை
காதலிக்கிறாயாமே;

இல்லை இல்லை

காதலிக்கிறாய்………..

இல்லை……………….

காத.. லிக்கி…றாய்….

இல்.. இல்.. லை..

(அவள் இல்லை எனும் போதே
அவள் கையிலுள்ள என் பெயரை பார்த்துவிட்டேன்)

சரி விடு
நான் போகிறேன்

எங்கு போவாய்?

எங்கோ..

போவதற்கு
பிறகேன் என்னை இங்கு
அழைத்தாய்?

நீ தான்
காதலிக்க வில்லை
என்றாயே;

சரி போ,

அப்போ காதலிக்கிறாய்..

இல்லை..

ஆம்.

இல்லை

ஆம்; ஆம்; ஆம்;

யார் சொன்னது உனக்கு
இப்படியெல்லாம்,

வேறு யார்..
இதோ நான் போவதை
தடுத்துக் கெஞ்சும்
உன்னிந்த –
இரண்டு கண்கள் தான்!

கண்களா???!!

உன் கையிலெழுதியுள்ள
என் பெயரும் தான்!

(பெயருமா என்றவள் கேட்டு சிரித்திடாத வெட்கம்
இதழ்களில் ஈரமாய் பூப்பதற்குள் –
என் நிழலும் அவள் நிழலும் அருகருகே சென்றுவிட்டன)
———————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

4 Responses to 22. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. tamilparks's avatar tamilparks சொல்கிறார்:

    அருமையான கவிதை, மிகவும் அருமையாக வடித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்

    Like

பின்னூட்டமொன்றை இடுக