47. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

லகெல்லாம்
எத்தனையோ பேர்
காதலிக்கிறார்கள்;

காதலில் தோல்வி
என்கிறார்கள்;

காதலால்
தற்கொலை என்கிறார்கள்;

காதலித்தால்
தனிக் குடும்பமாய்
போவோம் என்கிறார்கள்;

காதல் ஏதோ
கொடுப்பதும்
வாங்குவதும் என்கிறார்கள்;

அதலாம் தான்
காதலென்றால் –

யாரேனும் கேட்கும் போது
நீயும் நானும்
காதலிப்பதாய்
சொல்லவே சொல்லாதே.

காதலிப்பது –
யாரிடமும் சொல்வதற்கல்ல
காதலிக்க.

காதலென்பது –
எனக்கும் உனக்குமான
அன்பை
உடனுள்ளோருக்கும்
பறைசாற்ற.

காதலென்பது
எங்கோ பிறந்து
எப்படியோ வளர்ந்து சேரும்
இரண்டு ஆண் பெண்
பாலினத்திற்குள் இருக்கும்
உறவை –
மனதால் சேர்த்துவைக்க.

காதலென்பது
நமக்குள்ளிருந்து
சமூகம் வரை எட்டி-
ஜாதிமத பேதம் களைந்து
காதலாய்.. காதலாய்.. காதலாய் பரவ!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

6 Responses to 47. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. Tamilparks's avatar Tamilparks சொல்கிறார்:

    காதல் வரிகள் அருமை, வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை, அருமை

    Like

  2. Uwais U.Lebbe's avatar Uwais U.Lebbe சொல்கிறார்:

    நீங்கள் அருமை அருமை என்று சொல்லும் ஒவ்வொரு அருமையும் என்னை மானசீகமாய் வாழ்த்தும். அதைவிட வேறு வார்த்தை என்ன தமிழ், மிக்க நன்றி!

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி