0.000000
0.000000
Rate this:
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit


























கலக்கல் அண்ணா…..
LikeLike
மிக்க நன்றிப்பா.. முன்னேர் சரியெனில்; பின்னேர் சரி. அப்பா சரியெனில் பிள்ளைகளும் சரியெனும் கதை. ஆயினும், அப்பா தவறென்றாலும் பிள்ளைகள் அப்படி இல்லாது உயர்வாகவும், பெற்றோர் தெய்வீகமாக இருந்தும் பிள்ளைகள் தவறி போவதும் விதிவிலக்கென கொள்வோம்.
குழந்தைகளின் முதல் ஆசிரியன் பெற்றோர் என்பதை நம் முகில் (மகன்) வளர வளர மட்டுமில்லை, தம்பி தங்கைகளின் வளர்ச்சியினூடேவும் அறிந்துள்ளேன்!
LikeLike
அருமை
LikeLike
மிக்க நன்றி தோழர். அப்பா மகன் உறவு ஒரு வாசனையான உறவு. வாசனை எனில், உயிர் நனைத்து எஞ்சிய மனம். நுகராமால் உணரும் அன்பு நிறைந்த வாசம் தந்தைகளின் வாசம். (பொதுவாக பெற்றோரின் வாசம் எனக் கொள்வோம்).
அப்பாவின் ஒரு புன்னகை கூட, இன்று நினைத்தாலும் இனிக்கும் தானே? அவரின் அணைப்பு, பேசிய மொழி, கூறிய வார்த்தைகள், வழி நடத்திய விதம், எல்லாமே நம் பலத்தை கூட்டி, வாழ்வின் வெற்றிகளில் நம்மை நிலை கொள்ள செய்த பாதையின் சுவடுகள் மாறாத மனதின் அடியாழ வாசம் தானே.. ?
அதுபோலவே, மகனின், பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவும் வளர்ச்சியும் சிலாகிப்பும் சிரிப்பும் சப்தமும் அத்தனையும் மனதில் ஒவ்வொன்றாய் பதியும் ஒவ்வொரு கவிதை போன்ற, பசுமையான நினைவு தங்கும் தருணங்கள் தோழர்.
அந்த பசுமையின், எத்தனை முதுமை கொண்டாலும் மாறாத நினைவுகளின், ஒரு வாசம்; எப்பொழுதும் மறக்காத வாசம் தானே.. ? அதனால் தான் அப்பா மகன் உறவு, ‘ஒரு வாசனையான உறவென்றேன்…
LikeLike
எந்த பிள்ளையும் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்பினிலே. இந்த கூற்றை ‘முழுமையாக’ ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. தந்தையின் பாசம், அன்பு, அறிவுரை சரியாக ஒருபிள்ளைக்கு கிடைத்தால் அவன் பார்போற்றும் மன்னனாக வாழ்வான்.
பிள்ளைகள் நல்லது செயும்போது எந்த இடமானாலும் அந்த இடத்தில் பாரட்டி விடுங்கள். தவறு செயும்போது மிக அவதானமாக நிதானமாக அறிவுரை சொல்லவேண்டும். இந்த இடத்தில் தான் பல தந்தையர்கள் தப்பு செய்கிறார்கள்.
குறைந்த வரிவடிவங்களுக்குள் நிறைவான கருத்தொன்றை சொல்லி சென்றமைக்கு பாரட்டுக்கள் வித்தியாசாகர்.
LikeLike
ஒரு காலம் இருந்துள்ளது, அப்பா வேலைக்கென்றும், அம்மா வீடு பார்க்க (மட்டும்) என்றும். அதில், பிள்ளைகள் அம்மாவிற்குள் (மட்டும்) அடங்கிவிட்டார்கள் போல். அதின்றி, அவர்கள் நல்லவராவதும் தீயவராதும் அன்னை வளர்ப்பினிலே எனும் கூற்றில் ‘அன்னை’ என்பதை ‘தாய்மை’ என்று கொள்வோம் ஐயா.
ஆணோ பெண்ணோ; அதிக பங்கு வீடுகளில் குழந்தைகள் தடம் மாறிப் போவதும், நல்வழி அடைவதிலும் தந்தையின் பெரும் பங்கு வகிப்பது தாயிற்கும் கூட தெரியும். அந்த தந்தையின் அன்பிற்கு உருகும் பிள்ளைகள் தானே ‘நாமும் – நம் தாயும் கூட.
//பிள்ளைகள் நல்லது செயும்போது எந்த இடமானாலும் அந்த இடத்தில் பாரட்டி விடுங்கள். தவறு செயும்போது மிக அவதானமாக நிதானமாக அறிவுரை சொல்லவேண்டும்// மிக நல்ல கருத்து சொன்னீர்கள். எங்களின், முகிலின் வளர்ச்சிக்கு நாங்கள் துணையாய் இருக்க இக்கருத்தும் உதவும் ஐயா. மிக்க நன்றியானேன்!
LikeLike