உனை –
சற்று வளர்ந்ததும்
கடைக்கு அழைத்துச் சென்றேன்,
நீ குழந்தை பொம்மை
எடுத்தாய்
வீடெடுத்தாய்
வண்டிகள் எடுத்தாய்
நாய் கரடி பொம்மைகள் எடுத்தாய்,
மிதிவண்டி சொப்புகளென – என்னென்னவோ
எடுத்தாய்,
எல்லாவற்றையும் பார்த்து
துள்ளி குதித்தாய் –
சரி வைத்துவிட்டு வா போகலாமென்றால்
முடியாதென்று
அழுதாய் –
அவைகளை எல்லாம் பிடுங்கி
கடையிலேயே வைத்துவிட்ட
என் ஏழ்மை –
உனக்கு அவைகளை எல்லாம்
காட்டிவிட்டு மட்டும் வந்து
வீட்டில் அமர்ந்து அழுதது!
























