Daily Archives: மே 10, 2010

எனை சுட்டுப் போட்ட சமூகம்!!

ஏதோ ஒரு கவிதையின் கிறுக்கலில் – கொட்டிவிட இயலாத உணர்வின் மிகுதியில் நனைகிறது மனசு. காதல் கடந்து வாழ்க்கை கடந்து இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து இறக்கப் போகும் அப்பாம்மா வரை எண்ணி அழுகிற பலரில் என்னையும் ஒருவராய் வைத்துக் கொள்ளுங்கள். . யார் யாரையோ தேடி எங்கெங்கோ அலைந்து என்னெனவோ செய்து – எதிலுமே நிலைக்காத … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 33

உன் காதலி கூட உனக்கு – இத்தனை முத்தம் கொடுப்பாளோ என்னவோ; அத்தனை முத்தத்திற்கு பிறகும் உனையே நினைக்கிறது மனசு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 32

உண்மையில் – நீ என் மகன் என்பதை விட நான் உன் அப்பாயெனும் மகிழ்வில் மீண்டும் மீண்டுமாய் பிறக்கிறேன்; உன் ஒவ்வொரு சிரிப்பிலும் பூக்கிறேன்; நீ அழுத கணத்தில் உடைகிறேன்; நீ வளர வளர – என்னை நானே தொலைப்பேனோ என்ற பயத்திலும் – உன்னை வளர்க்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 31

கதவோரம் – ஒளிந்துக் கொண்டு பார்ப்பாய், ஓடி வந்து – கட்டிப் பிடித்துக் கொஞ்சுவாய், உயிர் மென்று குடித்துவிடுவதாய் எனை தேடிக் கதறுவாய் – இதெல்லாம் உனக்கு நினைவற்று போகும் நாளில் நானென்ன ஆவேனோ!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 30

எனையும் அம்மா அம்மா என்று தான் அழைப்பாய், பார்ப்பவர்கள் – எங்கனா அப்பான்னு வருதாப் பாரென்பார்கள்; நானும் – உனக்கு அம்மாப் போலென்று நான் – அதை கூட ரசிப்பேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக