6 உடைந்த கடவுள்!!

னிதன் செய்யும்
தவறுகளில் –
கடவுள் உதவிக்கழைக்கப் பட்டு
கடவுள் தோற்கடிக்கப் பட்டு
கடவுள் குறை சொல்லப் பட்டு
கடவுள் குற்றம் சாட்டப் பட்டு
கடவுள் மறுக்கப் பட்டு
கடவுள் சபிக்கப் பட்டு
கடவுள் உடைந்து தான் போனார்.

மனிதன்
உடைக்கவில்லை என்கிறான்;

கடவுள் மனிதனை
‘உடைத்ததாக சொல்வதேயில்லை.

கடவுள்
கடவுளாகவே இருக்கிறார்!!
——————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 6 உடைந்த கடவுள்!!

  1. கோவை கவி's avatar kovaikkavi சொல்கிறார்:

    .நன்றும் தீதும் பிறர் தர வாரா — என்ற முன்னவர் மொழியை – எண்ணினால், பின்பற்றினால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; மிக சரியாக சொன்னீர்கள். நமக்கு நேரும் அத்தனை இன்னல்களுக்கும் முதல் காரணம் நாம் தான் என்பதே முழு உண்மை. அதை கண்டு அதை சரி செய்தோமெனில் பிறர் நலம் கெடுவதும், நம் நலத்தால் தவிர்க்கப் படும். மிக்க நன்றி சகோதரி..

      Like

பின்னூட்டமொன்றை இடுக