குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு

ந்த கவியின் குரலை
சிங்க குரலில் வென்றவனே;

சின்ன பிள்ளை சிரிப்பில்
நெஞ்சம் கொள்ளை கொண்டவனே;

கொட்டும் மழை போல
இடி முட்டும் மேடைக் கொம்பனே;

படை கட்டி எவர் வரினும்
சற்றும் சலிக்கா வம்பனே;

சங்க கவி போல
மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே;

பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ
உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே;

பாவையோடு கூடி
தமிழ் ‘பா’ வை மறவாய் கவிஞனே;

உற்ற கவிதை போல மீண்டும்
பல கவிதைகளை பெற்றெடு தோழனே;

வாழையடி வாழையாய் நீ
நீடு வாழி செவ்வனே;

நற் செல்வங்கள் பதினாறும் பெற்று
நலமோடு வாழு இளையோனே!!
——————————————-

இம்மாதம் இருபத்தி நான்காம் நாள் நடைபெற இருக்கும் குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு நம் மனமார்ந்த நல்வாழ்த்தினை தெரிவிப்போம் தோழர்களே!!

வாழ்த்துக்களுடன்..

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்! and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு

  1. பிரமோத் ராஜன்'s avatar பிரமோத் ராஜன் சொல்கிறார்:

    ஐயா தங்களின் வாழ்த்து கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

    என்றும் அன்புடன்
    தங்களின் அன்பு சகோதரன் பிரமோத்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க மகிழ்வுடன் வாழ்க; மென்மேலும் வளர்க பிரமோத். மணப்பெண்ணாகிய சகோதரி மாதவிக்கும் எங்களின் சார்பாய் நல் வாழ்த்தினை தெருவியுங்கள். அன்பினால் உலகம் வெல்லுங்கள்!

      Like

  2. raj's avatar raj சொல்கிறார்:

    அருமை…

    Like

raj -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி