உன்னை அடைந்தப்
பின்னரே இரவின்
வெளிச்சங்கள் கூட –
ரகசியமாய் புரிந்தது;
உன்னை பிரிந்த
பின் தானே –
பகலில் கூட வாழ்வின்
இருள்கள் துளிர்கின்றன!
உண்மையில் பகலை தொட்டு
அடையாளம் கண்டுகொள்ளும்
என்னால் –
இரவை தான் நீயின்றி
தொடவே முடிவதில்லை;
ஆயினும் –
இப்போதெல்லாம்
இருபத்தி நான்கு மணிநேர
இருட்டில் தான் வாழ்கிறேன் நான்
உன் – பிரிவுக்குப்பின் என்பது
உனக்கும் எனக்குமே புரியும்!!

























கவிதை நன்று
LikeLike
மிக்க நன்றி அன்பு ரூபி, உருகி உருகி எழுதியதில் ஒன்று பிரிவுக்குப் பின் தொகுப்பும். தற்போது விற்ப்பனையிலும் உண்டு. 9600000952 என்ற இலக்கத்திற்கு தொடர்புற்று பெற்று படிக்கலாம்..
LikeLike