57 ஒரு தமிழனின் கனவு!!

ண்ணன் தம்பி
அம்மா அப்பா
பிள்ளை மனைவி
யாரையும் இழந்த
எம் உறவுகள் –
ஈழத்தை இழக்க மட்டும்
தயாரில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 57 ஒரு தமிழனின் கனவு!!

  1. அ.நம்பி's avatar அ.நம்பி சொல்கிறார்:

    //யாரையும் இழந்த
    எம் உறவுகள் –
    ஈழத்தை இழக்க மட்டும்
    தயாரில்லை!//

    உறவுகள்பால் நமக்கு உள்ள தொடர்பு நிலையானது அன்று; மண்ணின்பால் உள்ள உறவும் தொடர்பும் நிலையானவை; காலத்தைக் கடந்து நிற்பவை.

    நிலையான உறவுக்காக நிலையற்ற உறவுகளை இழக்கும் சூழல் ஏற்படுமாயின்…

    உங்கள் எழுத்து நன்று.

    வாழ்க; வளர்க.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உள்ளே பற்றியெரியும் ஒரு தீ இதலாம் அன்றி வேறில்லை ஐயா. வீழும் மக்களை வாழ்விக்க எதையேனும் செய்வோமே எனும் ஒரு சுய போராட்டத்தின் மேலெழுந்த கோபம். நம் முகம் பார்த்து நாமே பேசிக் கொள்வதில்; பொருந்துமாயின் பிறரும் எடுத்துக் கொள்வதில்; கொதிக்கும் ரத்தத்தில் ஏதேனும் ஒரு விடிவு அம்மக்களுக்காய் பிறந்து நம் இனத்திற்கான மண்ணில் நம் உறவுகள் வாழ்வதை கண்டு பூரிக்கும் வரை ஓயாத ஒரு பரஸ்பர சாடல்களின் சாட்சிகளன்றி வேறில்லை.

      எனினும், தங்களின் வாழ்த்தினால் மனம் மகிழ்ந்து பூரித்து இன்னும் பலம் கொள்வதை; நன்றியாய் அறிவிக்கிறேன்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக