Monthly Archives: மே 2010

31 மனைவிக்கு தெரியாமல் எழுதிய கடிதம்! (பெண்ணியம்)

எப்படி நிகழ்ந்ததோ அது ஆணுக்கு பெண் – அடக்கம் என்னும் சமாச்சாரம், சமபங்கு கொடுப்பதாய் உன்னையும் வேலைக்கனுப்பி உன் திறமைகளை வெளிப்படுத்த எண்ணி பாவம்; அவளும் கஷ்டப் படுவானேன் நிம்மதியாய் வீட்டில் இருக்கட்டுமே என நினைத்த இடத்தில் தான் துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்; உடல் கூசப் பார்க்கும் கயவர்களுக்கு மத்தியில் மனம் கூசி போவாயோ … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (42)

ஒரு லட்சமாம் இரண்டு லட்சமாம் கணக்கு சொல்கிறது செய்தி முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி; கணக்கில் வராது இறந்து போன எத்தனயோ உயிர்களுக்கென்ன இன்னொரு பிறப்பையா திருப்பித் தந்துவிடுமிந்த தேசங்கள்???? ஓஹோ; தமிழரை உயிர்கணக்கிலிருந்து தள்ளிவைத்துவிட்டார்கள் போல் சிங்களன் வெல்லும் வரை; பாவிகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (41)

முட்கள் உடைந்து போன மீனுக்கு வருந்தும் இனம்.. என் – வீர சமருக்கு துணை நிற்காது வருந்தியென்ன பயனென்று சபிக்குமோ நமை – விளக்கேற்றுகையில் – நம் மாவீரர்களின் ஆத்மாக்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (40)

ஒவ்வொரு உறக்கத்தின் போதும் இமை விட்டு நீங்காத – பிணக்குவியல்களாய் முள்ளிவைக்காலில் முடைந்துப் போன எம் உறவுகளின் அந்த பிரிவு – அந்த நாள் – அந்த கதறல்கள் – அந்த பொழுது – எனக்கு கடைசி நினைவாக இருந்துவிட்டாலென்ன!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (39)

இறந்த என் வீரர்களுக்கும் உறவுகளுக்கும் விளக்கேற்றி விளக்கேற்றி வைக்கிறேன்; கண்ணீர் அனைத்து அனைத்து விடுகிறது. உலகிற்கு எங்களின் இருட்டு மறைக்கப் பட்டு வெளிச்சம் மட்டுமே தெரிகிறது போல்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக