Monthly Archives: மே 2010

50 ஒரு தமிழனின் கனவு!!

இதுவரை வீடிழந்து நாடிழந்து விடுதலை தேடி திரியும் எம் உறவுகளே; உயிரை யாருக்கு வேண்டுமாயினும் விட்டுவிடுங்கள்; விடுதலை உணர்வை – ஈழத்திற்கு மட்டுமாய் மிச்சம் வையுங்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

49 ஒரு தமிழனின் கனவு!!

ரத்தம் ஊறிய மண்ணில் ஓர் தினம் புலிக்கொடி – பட்டொளி வீசிப் பறக்கும்; இது கனவென்று நினைக்கிறார்கள் சிலர்; ஆம் கனவு தான் தமிழனின் கனவு!!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3 முள்ளிவாய்க்காலிலிருந்து…

ஒரு நூறு தெரு தள்ளி தான் கேட்கிறதந்த சப்தம்; கண்ணீரால் யாரையோ கூப்பாடு போட்டழைக்கும் ஒரு ஓலம் அது; சுலபமாய் சொன்னால் மரணம் எனலாம், வாழ்பவன் கற்றும் தெளியாத அல்லது – கற்காத பாடம். மரணம் என்றாலே நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு மரணமின்றியே இயங்குகிறது நிறைய சதைகள்; ஆம், ஜாதி பேசி மதம் பேசி இனம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்பு தங்கைக்கொரு பாட்டு..

அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே.. எனை சுற்றி சுற்றி வளையவர அன்பின் – சாமி போல பிறந்தவளே.. மனசெல்லாம் பரவி குழந்தை போல வளர்ந்தவளே.. வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே.. ஏனழுதேனென்று கேட்காமலெ எனக்காக அழுபவளே.. நான் பேசாத மௌனத்தில் அழுகையாய் கரைபவளே.. கட்டளையிடும் முன்னாலே செய்கையாய் சிரிப்பவளே.. சிரித்து சிரித்தே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா”

முன்பாகவே வாழ்த்தி மகிழ்ந்த அன்புள்ளங்களுக்கு நன்றி! 21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள், … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக