Monthly Archives: மே 2010

பிரிவுக்குப் பின் – 79

எத்தனையோ பூக்களுக்கு மத்தியில் சிரிக்கும் ஏதோ ஒரு அதிசய பூவிலிருந்து தான் துவங்குகிறது அத்தனை ஆண்களின் வாழ்க்கையும்; எனக்கும் நீ அப்படித் தான் – இடையே சற்று பிரிவென்னும் முட்களோடு!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 78

நீயும் நானும் தெருவில் நடக்கையில் – நீ என் கை பிடித்து வருவாய், உள்ளுக்குள்ளே – ஆயிரம் தேவதைகள் கூட நடப்பது போல் உணர்வேன்; இங்கும் நான் தனியே நடக்கையில் நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து என் கை பிடித்துக் இழுக்கிறாய்; நான் திரும்பிப் பார்ப்பேன் – நீ மட்டும் தெரிவதேயில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 77

உன்னை அடைந்தப் பின்னரே இரவின் வெளிச்சங்கள் கூட – ரகசியமாய் புரிந்தது; உன்னை பிரிந்த பின் தானே – பகலில் கூட வாழ்வின் இருள்கள் துளிர்கின்றன! உண்மையில் பகலை தொட்டு அடையாளம் கண்டுகொள்ளும் என்னால் – இரவை தான் நீயின்றி தொடவே முடிவதில்லை; ஆயினும் – இப்போதெல்லாம் இருபத்தி நான்கு மணிநேர இருட்டில் தான் வாழ்கிறேன் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 76

உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

32 பழைய வாடகை வீடு..

புதிதாக குடி வந்த பழைய வாடகை வீட்டில் இதற்க்கு முன்னிருந்த எல்லோரின் அடையாளங்களும் பழமை பூத்திருக்க – சுற்றி சுற்றி தேடியதில் மூடியற்ற – எழுதாத எழுதுகோலும் பழைய நாளிதழ்களும் பயன்படாத துணி பிடிப்பானும் எங்கோ மூலையில் கிடந்த ஒரு துண்டு சிகரெட்டும் இருந்து போனவர்களை பற்றி என்னென்னவோ பேசியது. இதற்கு முன் யார்யாரெல்லாம் இருந்தார்களோ … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 8 பின்னூட்டங்கள்