வேண்டாத கவிதை

காலக் கழிவுகளில்
மிச்சமாய் மீந்ததெல்லாம்
நினைவுகளும்; தடங்களுமே;

நாம் விட்டுச் சென்ற
தடங்கள் மட்டுமே – நாளை
நமக்கான வரலாற்றை பேசுகிறது;

நாமெல்லாம்
இன்றினை நோக்கி
வாழ்வதாகவே நினைத்துக் கொள்கிறோம்,
நிறைய பேருக்கு தெரிவதேயில்லை –
நாளைய வரலாற்றை தான்
நாம் இன்றே எழுதுகிறோமென;

ஒரு வரலாற்றை
புரட்டிப் போடவேண்டிய –
பாதி தொலைவில் தான்
நீயும் நானும் நிற்கிறோம்;

சற்று சிந்தித்தால்
சற்று முயற்சித்தால்
சற்றினை தாண்டி –
உழைக்க முற்பட்டுவிட்டால்
நம் நாளைய வரலாறும்
இன்றே புரட்டி போட்டுக் கொள்ளப் படும்;

அவரவர் வாழ்க்கையும் வரலாறும்
அவரவரே எழுதிக் கொள்கிறார்க்ளென
சொல்வதற்கெதற்கு கவிதை!
———————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிலல்றை சப்தங்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக