Daily Archives: திசெம்பர் 28, 2009

மனிதம் பிறப்பிப்போம்!

உனக்கும் எனக்குமான நிகழ்வுகளில் பாசமும் போட்டியும் எப்படியோ நிகழ்ந்தே விடுகிறது; யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர் எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ? அந்த மெச்சுதலில் தான் தோன்றி போயின எத்தனை கோடுகள் – நாடென்றும் இனமென்றும் மதமென்றும் ஜாதியென்றும் – மொத்தமாய் மனிதத்தை கொன்றுவிட்டு! எங்கோ போகிறது நம் வாழ்க்கை கல்கி பிறப்பார் கடவுள் வருவார் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 6 பின்னூட்டங்கள்

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 2

தீபாவளி எண்ணெய் தேய்த்துக் குளித்து இனிப்பு தின்று சுறுசுருப்பாயின – தீக்காய பிரிவும் தீயணைப்புப் படையும்! முனு.சிவசங்கரன்

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | 2 பின்னூட்டங்கள்

ஈழம்

கத்தி எடுத்ததும் குண்டு வெடித்ததும் வரலாறு; குழந்தை கொன்றதும் குடி அறுந்ததும் வரலாறு; ரத்த ஆறு கடந்து மனித சடலம் குவித்து எரித்தது வரலாறு; பெண்களை கெடுத்து கொன்றதும் கொன்று கெடுத்ததும் வரலாறு; எல்லாம் வரலாறு வரலாறே மிஞ்சிக் கிடக்க – ஒரு விடியல் கிடைக்காமலே ஈழம்! ——————————————- வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த

எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த வாழ்வின் போராட்டங்களில் மறவாத ஏதோ ஒரு – சம்பவத்தையேனும் – நினைவு படுத்தி விடுகிறது; ஏதேனும் ஒரு கவிதை! எனவே கவிதை எழுதுங்கள் – காலை வணக்கமும் உரித்தாகட்டும்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 1

அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய் அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய் அண்ணனைத் தம்பியை அக்காளைத் தங்கையை மாமனை மச்சானை மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பாட்டனை பூட்டனை அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை இன்ன பிறவெல்லாம் கொன்றாய் – தேசத்து விடுதலையின் பெயரால்.” “எச்சங்களில் – “எந்த எலும்பு” உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்! இவையெல்லாம் எதன் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | 5 பின்னூட்டங்கள்