Daily Archives: திசெம்பர் 21, 2009

ஹைக்கூ – 17

வெள்ளித் திரையில் கதாநாயகன் கதாநாயகியின் ஆட்டம் இரண்டு பக்கத்திலும் சேலையின்றி ஆடும் தேவதைகள் வெற்று ரவிக்கையில் – வீழ்கிறது தமிழச்சி மானம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 16

நிறைய கட்டிடங்களில் புதைந்திருக்கிறது சில கொத்தனார்களின் காதல் கதை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 15

பிசாவும் பர்கரும் தின்றதில் செரிக்கவேயில்லை; சிறுவயதில் தின்ற நிலா சோறின் ஞாபகம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 14

என் வீட்டு மொட்டை மாடியில் நிலா வருகிறது நட்சத்திரம் வருகிறது’ நீ மட்டும் – எதிர்வீட்டிலிருந்தும் வரவில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 40

நான் ஒவ்வொரு பொருளையாக அடுக்கி வைத்துக் கொண்டே வருகிறேன்; என் குழந்தை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வீசிக் கொண்டே வருகிறது. என் குழந்தையின் யதார்த்தம் மீண்டும் அவைகளை நான் எடுத்து அடுக்கி வைத்ததில் களைந்து தான் போனது!!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக