Daily Archives: திசெம்பர் 23, 2009

சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

இரவின் – இருட்டின் உள் கூரைக்கு மேலே படர்ந்த – சிமினி விளக்கின் வெளிச்சத்தில் விழுந்த இங்குமங்குமாய் நடந்துக் கொண்டிருக்கும் அப்பாவின் நிழலில் – அப்பாவின் மனமே தெரியவில்லை தான்; ஆனால், எனக்குத் தெரியும் நாளைக்கு அப்பாவிற்கு சம்பளம்; வீட்டு வாசலில் நின்று கழுத்தை நெரிக்கப் போகும் கடன் காரர்களுக்கு – என்ன பதில் சொல்வதென்ற … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 48

அதோ உனக்காக நான் சேர்த்து வைத்த கனவுகளையெல்லாம் – உன் சிரிப்பினை தொட்டுப் பறக்கும் பட்டாம் பூச்சியோடு பறக்க விட்டுவிட்டேன்; மீண்டும் நீ – என்னை பார்த்து சிரிக்காமலா போவாய்; சிரித்தால் ஒரு பட்டாம் பூச்சியை இனமாகத் தருகிறேன், அதை பிடித்து உன் இதயத்தில் பறக்கவிடு – அது பறக்கையில் உதிரும் வண்ணங்களில்.. என் கனவுகள் … Continue reading

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 47

சொட்டு சொட்டாகத் தான் சொட்டுகிறதென் கண்ணீர் அது உயிருமென – உனக்கு புரிந்திருந்தால் நீயும் காதலித்திருப்பாயே!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 46

காதலுக்கு எந்த இலக்கணமும் நான் கற்கவில்லையடி – உன்னை பார்த்ததை தவிர!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 45

யாருமே – தொட்டிடாத இடம் லேசாகத் தான் தட்டினாய் – உன் பார்வையில் படக்கென திறந்ததென் இதயம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக