Daily Archives: திசெம்பர் 29, 2009

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 4”

கழுகு கழுகாரே.. கழுகாரே.. முக்கால் மைல் தூரம் மேலே பறந்தாலும் கீழேயுள்ள உயிர்கள் கூட உனக்கு நன்றாகத் தெரியுமாமே; நீ – மகாவிஷ்னுவிற்கே வாகனமாமே; கொஞ்சம் மேலே பறந்து வட்டமடித்து வா – எங்கள் தமிழீழ மண்ணில் புதைக்கக் கூட இல்லாமல் காடுகளில் ஆங்காங்கே – அழுகிக் கிடக்கும் ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஒவ்வொரு வரலாறிருக்கும் சொல்வாயா … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

எல்லோருக்கும் பறவை கவிதை பிடிக்குமென்று நினைக்கிறேன். அது ஒரு வலியின் சுவடு.. தவிர இக் கவிதைகளுக்கு காரணம் சொல்லவேண்டாம் அது ஒரு வலி வேதனை ரணம், உடல்கட்டை எரிந்தாலும் ஆறாத காயம். நேரில் காணாவிட்டாலும் காதுக்கருகில் வெடிக்காத சிங்கள குண்டுகளின் சப்தம் என் மனதை தொலைத்த வலிகளும், நாளிதழ்களிலும், மின்னஞ்சல்களில், செய்திகளிலும் ரத்தம் ரத்தமாக கண்ட … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 5”

சிட்டுக் குருவி சிட்டுக் குருவிக்கு வணக்கம்; வணக்கம் ஐயா; எங்கிருந்து வருகிறாய் – ஏனிப்படி சோகமாகத் தெரிகிறது உன் முகம்? உன் கிரீச் கிரீச் சப்தமெங்கே காணோம்? வேண்டாமைய்யா என்னை ஏதும் கேட்காதீர்கள்; நான் – ஈழத்திலிருந்து வருகிறேன்; கை முடமும்.. கால் முடமும்.. தலை துண்டிக்கப் பட்டும்.. கண்டம் துண்டமாய் மனிதர்கள் வெட்டப் பட்டும்.. … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 1 பின்னூட்டம்

1. ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

புறா யாரேனும் தூது விட்டால் பல்லாயிரக் கணக்கான மைல்களை பறந்து – கடப்பாயாமே புறாவே; நானொரு – ஈழ மகள், என் மகன் எங்கேனும் தொலைந்தாவது; இறந்தாவது; கிடக்கிறானா பார்த்து சொல்வாயா? அவள் கதறிவிட்டு மீண்டுமந்த புறாவிடம் – சொன்னாள் “இன்னொன்றையும் கேள் புறாவே.. ஒருவேளை அவன் சிங்களனுக்குப் பயந்து எங்கேனும் ஒளிந்திருந்தாலோ; சிங்களனின் குண்டு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 2”

காகம் ஒரு – வயோதிக காகம் இறந்து வீழ்கிறது தரையில்; அதைச்சுற்றி கணக்கிலடங்கா காகங்கள் வட்டமடித்து – தன் சோகத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றிக் கொண்டிருக்க; ஒரு – மனிதன் கூட உடனின்றி வெறும் – குப்பைகளாய் அகற்றப் பட்டன ஈழ தமிழர்களின் உடல்கள். கேட்டால் – பிணமாம்.. பலமுறை பிறக்க இறந்த தமிழனின் – ஒரு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக