உடம்பெல்லாம் பூ பூக்கும்
மனசெல்லாம் குழந்தையாய் சிரிக்கும்
மனைவி முகத்த பார்த்தா
பெத்த தாயி நினைவு வரும்
யாரு மறந்து போனாலும்
மறக்காத மனைவி முகம்
இன்று பார்த்த ஒரே முகம்;
மறு பிறவி, சொல்லிடலாம்
இன்று மட்டுமே கண்டிடலாம்
மீண்டு வந்த மனைவிக்காக
ஆயிரம் கோவில் சென்றிடலாம்
பெற்ற வயிறு சுருங்கி போயி
மயங்கி கிடக்கும் மனைவி முன்பு
சாமி எல்லாம் மறந்துவிட்டு கையெடுத்து கும்பிடலாம்;
தொட்டு தொட்டு பார்த்தாலும் சுகம்
கண்ணு நிறைய நிறைச்சாலும் சுகம்
கையேந்தி வாங்கி அணைச்சாலும் சுகம்
கடை தூரம் நின்று நினச்சாலும் சுகம்
பிறந்த பிறப்பின் பேரு கண்டு சிரிக்கும்
குழந்தை பிறப்பே சுகமோ சுகமோ சுகம்!
தாயும் சேயுமாய் மகிழ்ந்த
தந்தையுமாய் –
போற்றும் உற்றார் உறவினருமாய்
பல்லாண்டு பல்லாண்டு
சீரும் சிறப்புமாய் –
வாழ்க எங்களின் அன்புறவுகளே… வாழ்க!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாலாஜ்;
சகோதரிக்கும் வாழ்த்து சொல்லுங்கள்
குழந்தையின் காதில் சென்று எங்களின் வாழ்த்தையும்சொல்லுங்கள்!
சில மாதங்கள் வரை
சகோதரியை உங்கள் அதிக கவனத்தில் கொள்ளுங்கள்!
குழந்தையை இரண்டு கைகளால் தூக்கி
மலர்போல அணைத்து –
கண்களால் கதை நூறு பேசுங்கள்;
குழந்தைக்கு பார்வை புரியும்.
தந்தையின் தாயின் அதிர்வு உணரும்!
நீங்கள் நேராக குழந்தையையே பார்த்தால்
அதும் பார்க்கும். பார்வையில் நிறைய கற்றுகொள்ளும்!
வாழ்த்துக்கள்; வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
























