மரணத்தை கேட்டுப் பார்..

ஓ.. மனிதா!
ஒரு கால தூர இடைவெளியில்
நிகழ்கிறது –
உனக்கும் எனக்குமான போர்;

நேற்றைய அண்ணன்
இன்றைய பங்காளிகளல்ல நாம்;

மனிதன் பிறப்பிலிருந்தே
சுயம் அறுக்காதவன் –
நேற்றிலிருந்தே அவன் அப்படித் தான்
எப்படி இன்றோ;

இடையே பிறந்து
ஏதோ ஒரு புள்ளியில் அற்று போகிறது
பாசமும் நட்பும் காதலும்;

கேட்டால் விருப்பு வெறுப்பென்றோ
விதியென்றோ சொல்லி
விலகிக் கொள்கிறோம் –
உண்மை எல்லோராலும் விளம்பப் படுவதேயில்லை!

உண்மையை மரணம் பேசுகிறது
எல்லாம் உதறி தனியே செல்கையில்!
——————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிலல்றை சப்தங்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக