Monthly Archives: திசெம்பர் 2009

1. ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

புறா யாரேனும் தூது விட்டால் பல்லாயிரக் கணக்கான மைல்களை பறந்து – கடப்பாயாமே புறாவே; நானொரு – ஈழ மகள், என் மகன் எங்கேனும் தொலைந்தாவது; இறந்தாவது; கிடக்கிறானா பார்த்து சொல்வாயா? அவள் கதறிவிட்டு மீண்டுமந்த புறாவிடம் – சொன்னாள் “இன்னொன்றையும் கேள் புறாவே.. ஒருவேளை அவன் சிங்களனுக்குப் பயந்து எங்கேனும் ஒளிந்திருந்தாலோ; சிங்களனின் குண்டு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 2”

காகம் ஒரு – வயோதிக காகம் இறந்து வீழ்கிறது தரையில்; அதைச்சுற்றி கணக்கிலடங்கா காகங்கள் வட்டமடித்து – தன் சோகத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றிக் கொண்டிருக்க; ஒரு – மனிதன் கூட உடனின்றி வெறும் – குப்பைகளாய் அகற்றப் பட்டன ஈழ தமிழர்களின் உடல்கள். கேட்டால் – பிணமாம்.. பலமுறை பிறக்க இறந்த தமிழனின் – ஒரு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 1”

கொக்கு ஒற்றை கால் தவம்; தமிழீழ வரம் கிடைக்கவேயில்லை தமிழனுக்கு! தவம்.. தவம்.. தவம் நிஜம்; தமிழீழம் கிடைக்குமென்பதும் நிஜம்; கொக்கு – ஞானப் பறவை!! ——————— வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்

எடுக்கத் துணிந்த வரலாறு – திலீபனை மறந்து தொலைத்தால் பெரும்பாடு; இதயம் உருக்கும் கதை கேளு – திலீபன் இறந்து படைத்த உணர்வோடு! இருபத்திநான்கு வருட – வாழ்க்கையடா பன்னிரண்டு நாள் – விரதமடா உயிரை வெல்லக் கொடுத்த வீரனடா அஹிம்சைக்கு அர்த்தம் தந்த – தியாகியடா! முடுக்குமூளை உணர்வெல்லாம் – திலீபன் – மூளைமுடுக்கு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து சுட்டு சாய்த்த – ஜனங்க நாங்க; சிங்கள அரசு திமிரை எதிர்த்து மாறு தட்டின – தமிழன் தாங்க! உயிரை கொடுத்து- உயிரை கொடுத்து- ஈழங் காத்த – மனுஷ(ன்) தாங்க; காலங்காலமா ஒரு இனம் செத்து மடிந்தும் – தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க! முள்ளு வெளி கம்பியெல்லாம் எங்க … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்