நாளெல்லாம் வெய்யிலில்
ஐஸ்வண்டி தள்ளுபவனுக்கோ,
தெருவோரம் அமர்ந்து உச்சி பிளந்து
ஒரு கத்தை கீரை வாங்கக் கூவி கூவி விற்கும்
வயதான தள்ளாத கிழவிக்கோ,
பத்துபாத்திரம் தேய்த்து தேய்த்து
கையில் ரேகை மறைந்து போன
என் குடிசை வீட்டு சகோதரிக்கோ,
ஊரெல்லாம் சுற்றி கால் வீங்கிய
காய்கறி காரனுக்கோ..
கையெல்லாம் காரத்தால் வெந்துபோன
சுண்ணாம்பு அடிப்பவனுக்கோ..
மீன் விற்பவனுக்கோ
மூளை தெரு பெட்டிக் கடை
அண்ணாச்சிக்கோ –
காலையில் பேப்பர் போடும் சிறுவனிலிருந்து
மாலையில் நடந்து
பால் கொண்டு வரும் தாத்தா முதல்
மேதினக் கொண்டாட்டம் இருக்குமெனில்
தெருவெல்லாம் பெருக்கி
நச்சு கால்வாயில் தூர் வாரும்
தொழிலாளிக்கு ஓர்தினம்
வாழ்வு மலருமெனில் –
நம் வாழ்வின் முன்னேற்றத்தால்
அவர்களின் நிலையை சற்று மாற்ற முடியுமெனில்
ஏழைகளின் சுமையை குறைக்க
நீயும் நானும் காரணமாவோமெனில் அன்று
உனக்கு நீயும் –
எனக்கு நானும்
மேதின வாழ்த்து சொல்வோம்;
அதுவரை இதை ஒரு
அதிகாரம் எதிர்க்கக் குறித்த
போராட்ட நாளென்றே கொள்வோம்!
——————————————————————
வித்யாசாகர்
மேதின வரலாறு: http://natputanramesh.blogspot.com/2010/05/blog-post.html
மானுட விடுதலை மற்றும் தோழர் முத்துக்கண்ணன் அவர்களுக்கு நன்றி!

























உண்மையான மே தின வாழ்த்துக்கள் என்ன என்பது குறித்தும் மே தினத்தில் நாம் ஏற்க வேண்டிய சூளுரை குறித்தும் எனது பதிவில் எழுதியுள்ளேன். இங்கே சொடுக்கவும்:
மே தின வாழ்த்துக்கள்
LikeLike
படித்தேன். ஏற்க வேண்டிய சூளுரை தீபக் வாசுதேவன். மிக்க நன்றி!
LikeLike
super sir
LikeLike
மிக்க நன்றி வித்யாசாகர். மேதினம் ஒரு தொழிலாளர்கள் தினம் எனினும், நம் வீட்டிற்கு வேலை செய்பவர்கள் தானே இந்த காய்கறி விற்பவர்கள், சுண்ணாம்பு அடிப்பவர்கள்.. பால் கொண்டு வருபவர்கள் இன்னும் பிற எல்லோரும், பிறகு நாம் நினைத்தால் அவர்களின் தரத்தையும் நம் அளவிற்கு உயர்த்தலாமில்லையா. நம் போராட்டம் என்பது யாரை நோக்கியுமல்ல. அதிகாரம் என்ற ஒற்றை வார்த்தையில் தான். அதிகாரத்தில் வார்த்தை உயர்த்தி அடித் தட்டில் ஒரு பகுதி மக்களை இன்னும் அடிமை போலவே வைத்திருக்கும் உள்ளழுக்கை உடைத்தெறிவோம். எல்லோரும் ஒன்றென்றதில் உள்ளம் பூரித்து அவர்களுக்குமான நலனில் அக்கறை கொள்வோம், அந்த உழைக்கும் வர்க்கத்திற்கும் ஒரு நாளென நம் தொழிலாளர் தினத்தை பொதுவுடைமையாய் ஒருநாளில் கொண்டாடுவோம்.
LikeLike