பிரிவுக்குப் பின் – 81

தொலைபேசியில்
பேசும்போது –
ஏதோ நீ பேச வந்ததை
பாதியில் நிறுத்தினாய்;

நாம் கடந்த இரவுகளின்
மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்;

தயவுசெய்து –
கடிதத்தில் கூட அவைகளை
எழுதிவிடாதே,

இன்னும் –
ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க
எனக்கு பலமில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக