Daily Archives: மே 25, 2010

54 ஒரு தமிழனின் கனவு!!

நெல்மணிக்கும் தேயிலைக்கும் விவசாயம் பார்த்த தமிழனமே; வாருங்கள் ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும் ரத்தத்தில் – எந்த உயிர் யாருடையதெனப் பார்ப்போம். ஒருவேளை அது – என்னுடையதாய் இருந்தால் மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள் ஈழம் வெல்லும் வரை மட்டும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

53 ஒரு தமிழனின் கனவு!!

உலக தமிழினங்களே வாருங்கள் – ஒரு வாரம் ஈழத்தில் தங்கி இறந்த போராளிகளின் உடம்பு கறி கிடைக்கும் தின்று – விடுதலை உணர்வை மீட்டுக் கொள்ளுங்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

52 ஒரு தமிழனின் கனவு!!

குண்டு வெடி சப்தத்திற்கோ பீரங்கியில் சிதைந்து போகும் மரணத்திற்கோ பயமில்லை; இறந்து கொண்டிருப்பது வெறும் போராளிகள் மட்டுமல்ல எங்களின் நம்பிக்கையுமென்பதே பயம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

51 ஒரு தமிழனின் கனவு!!

இறந்தவர்களுக்கு இறந்த பின்பும் நிறைய கடிதங்கள் எழுதப் படுகின்றன; பதிலாய் வரும் அத்தனை கடிதத்திலும் ஒற்றை சொல்லே வருகிறது; மீண்டும் மீண்டும் போராடுங்கள்.. போராடுங்கள்..

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

50 ஒரு தமிழனின் கனவு!!

இதுவரை வீடிழந்து நாடிழந்து விடுதலை தேடி திரியும் எம் உறவுகளே; உயிரை யாருக்கு வேண்டுமாயினும் விட்டுவிடுங்கள்; விடுதலை உணர்வை – ஈழத்திற்கு மட்டுமாய் மிச்சம் வையுங்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக