உள்ளமெலாம் கோவில் கோவில்
உற்ற எண்ணங்களே ஆலைய சுவர்கள்
நம்பிக்கையே விழாதென நம்பும் கோபுரம்
நல் முயற்சியே மீண்டும் மீண்டுமாய் நம்மை
தூக்கி நிறுத்தியிருக்கும் தூண்கள் –
அன்பு ஒன்றே இதயத்தில் வீற்றிருக்கும்
இதயங்களுக்கு ஆராதனை செய்யும்
தீப ஒளி தோழர்களே..
அந்த அன்பு தீபத்தின் ஒளி பொங்க
அன்புள்ளங்களுக்கென் வணக்கம்!
























