வணக்கத்தின் விரல்
நுனியிலிருந்து –
உனக்காய் எட்டிப் பார்கிறதென்
இதயம்!
உன் காத்திருப்பின்
தவிப்புகளில் –
முழுதையும் எனக்காய் பெற்றுக் கொண்டு
ஓடோடி வந்தேன் உனக்காய்;
உனக்காய் எனில் –
யாரந்த உன்? யாரந்த நீ?
நீயெனில் –
நீங்களின்றி வேறு யார் தோழர்களே..
நாட்கள் சில நகர்ந்து
வருடங்கள் கடந்ததாய் எழும் ஒரு
குறுகுறுப்பினை தாண்டி –
அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
சற்று விட்டு வர இயலாத வேலை.. தோழர்களே மன்னிக்கவும்!!
























