இன்னொருமுறை எரிந்து போயேன் – முத்துக் குமரா

சிங்கள ரத்த விழியில்
தமிழ் கனல் தகிக்க வந்தவனே;

ங்களின் மூடிய புத்தியை கிழித்து
இன ரத்தம் காட்ட வெந்தவனே;

வீட்டு –
தொலைகாட்சி சப்தத்தில்
அடைந்த காதுகளில் அறைந்து –
ஈழ – வெடி சப்தம் கேட்க, வைத்தவனே;

லக எல்லைகோடு வரை
தமிழரை நாணப் பட வைத்து
சற்று ஈழம் காக்க சொன்னவனே;

ங்கோ விழும் பிணத்தை
எடுத்து –
பார்-இது-உன், உறவென காட்டிச் சென்றவனே;

ந்திய துரோகம் மறந்து
தூங்கிய இளைஞர்களை தட்டி எழுப்பி
வீரம் புகட்ட எரிந்தவனே –

இன்னும் கூட
நாங்கள் என்ன செய்தோம்?????

ன்னொரு முறை பிறந்து வந்து
மிச்சமுள்ளவர்களுக்காய் –
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!
—————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக