ஒரு வானவில்
அழகில் –
குழந்தை சிரிக்கும்
கொஞ்சும் சிரிப்பில் –
கட்டி அனைத்த நண்பனின்
இறுக்கத்தில் –
காதலி பேசும்
கடைக்கண் பார்வையில் –
அம்மா தலை சாய்த்துக் கொண்ட
மடியினின்பமென –
எங்கெங்கோ சுற்றி விளயாடுமின்பம்
தமிழில் ஒரு கவிதை
புனைந்ததாய் உணர்கையில்
வருவதே பேறு!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
























