நின் வாழ்வின் வளங்கள்
நலம் பெற வாழ்த்துக்கள்;
கோடி பூக்களின் வாசமாய்
நின் பெருமை கமழ வாழ்த்துக்கள்;
சங்ககவி சுவை போல
என்றும் மங்கா திறம் பெற வாழ்த்துக்கள்;
சந்திர சூரியர் போற்றும் காலம் வரை
நின் பெயர் –
வரலாறாய் வளம் கொள்ள வாழ்த்துக்கள்!
நீடு நெடுங்காலம்
நல் உடலும் பலமும் பெற வாழ்த்துக்கள்;
நீடூழி நலமாக
உன் நல்லாசையெல்லாம்
நிறைவேற வாழ்த்துக்கள்;
காலப் பொன்னேட்டில்
வெற்றியின் நாயகனாய் நீ
வளம் வர வாழ்த்துக்கள்;
ஆக, இப்படி எத்தனை
வாழ்த்தினாலும் மனதில் அன்பு குறையாத
இன்னும் வாழ்த்திக் கொண்டே இருக்கத் தூண்டும்
அன்புத் தம்பியாய் என்றுமிருக்க –
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்களுடன்..
அனைவரும் அன்பின் முத்தங்களோடு..
























