பிரிவுக்குப் பின் – வேலைக்கென வெளியூர் சென்று..

வேலைக்கென வெளியூர் சென்று, அக்கா தங்கைக்கென சில வருடங்கள் கழித்து, நாற்பதின் நெருக்கத்தில் திருமணமாகி, பிறந்ததும் பெண்ணாக பிறப்பின்; அதும் இரண்டோ மூன்றோ பிறப்பின், அவர்களை கரைசேர்க்க காலமெல்லாம் அயல் நாடுகளில் வாழ்ந்துவிட்டு, ரத்த சூடும்; குடும்ப பாரமும் குறைகையில், வீடு வரும் அண்ணாச்சிகள்; எத்தனை பேரை கண்ணீர் மல்க வழியனுப்பி விட்டிருக்கிறோம் ‘இந்த பாலை வன தேசத்தின் விமான நிலையத்திலிருந்து!

அப்படிப் பட்ட ஒருவர் தன் வீடடைந்ததும், தன் மனைவியை பார்கையில் வரும் கண்ணீரின் அர்த்தம் என்னவாக இருக்குமென்பதே இக்கவிதை!

பிரிவுக்குப் பின் – 11

வாழ்வின் சுவாரஸ்யங்கள்
நம் பிரிவுகளில் –
தொலைந்திருக்க;
ஒன்றாய் சந்தித்த போது
அதை தேடும் –
அவசியமற்றுப் போனதே;

ண் கூட பார்வை மங்கி
ஆசைக்கு நரை விழுந்து
உதிர்ந்த முடியும்;
தழு தழுக்கும் குரலும்
சுருங்கிய ரோமமும்
சற்றும் – வாழ்தலின் அவசியம் அற்றும் போய்
எல்லாம் துறந்தவனாய் –
உள்ளத்தால் காவியுடுத்தி
ஊர் வருகையில் –
உன் அருகாமையில் உயிர் துறக்க
நான் மட்டுமே மிஞ்சினேனடி!

ணமும்.. கட்டிய வீடும்..
பகிர்ந்து வாழ்ந்த சொந்தங்களும்
இதோ நம் அருகில் தான்
இருக்கின்றன;
நான் மட்டுமே உன் அருகாமையிலிருந்தும்
எங்கோ உனை விட்டு தொலை தூரம்
தொலைந்ததாய் குற்ற உணர்வோடு – ஒரு
கணவனாக மட்டும் வந்திருக்கிறேன்;

தொலை பேசி அழைப்பும்
அழை நிரம்பிய கடிதமும்
மாதம் தவறாமல் அனுப்பிய சம்பளமும்
வருடங்கள் பல தாண்டி – நான்
கிழவனாக வந்ததில்;
நமக்கான என்னென்ன தொலைத்தோமோயென
யாருக்கு என்ன கவலை வந்து விடும்???

ஒருவேளை, மண்ணுக்கு போனபின் –
உன் கதறலில் ஒரு வரி
‘அடப்பாவி மனுசா, வாழ்ந்தும் கூட வாழல –
இப்போ வந்ததும் அம்போன்னு விட்டு போனாயே
உன்னோடு வாழ்ந்ததில் என்ன சுகம் கண்டேனென்று
கதறுவாயோ…???

னக்கு நான் மட்டுமே
புருசனானேன்-
நம் வீட்டிற்கும் நான் ஒருவனே பிள்ளையானேன்
எல்லாம் கரை சேர்ந்த பொது
நம் வாழ்க்கை கரை ஒதுங்கி போனது –
எந்த விதியோ
எவரின் சாபமோ
எந்த கடவுள் கொடுத்த வரமோ போகட்டுமேடி

ன்னொரு ஜென்மம் உனக்கு
கணவனாக பிறப்பின்
கட்டைவண்டி இழுத்தாவது
கஞ்சி குடித்தாவது
கிழிசல் உடுத்தியாவது
உன் கூட மட்டுமே வாழ்வேனடி;
நாடு விட்டு போக –
நான் மட்டும் பிள்ளையாக வேண்டாமேயென
கடவுளிருப்பின் இப்பவே வேண்டிக்கடி!
இப்பவே வேண்டிக்கடி!!
———————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக