ஈழம்

த்தி எடுத்ததும்
குண்டு வெடித்ததும் வரலாறு;
குழந்தை கொன்றதும்
குடி அறுந்ததும் வரலாறு;
ரத்த ஆறு கடந்து
மனித சடலம் குவித்து எரித்தது வரலாறு;
பெண்களை கெடுத்து கொன்றதும்
கொன்று கெடுத்ததும் வரலாறு;
எல்லாம் வரலாறு வரலாறே
மிஞ்சிக் கிடக்க –
ஒரு விடியல் கிடைக்காமலே ஈழம்!
——————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக