ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

ழ தேசத்தின் –
கதறல்கள் காதை பிளக்கத் தான்
கையில் சோற்று தட்டேந்தி –
வாழுகிறோமோ;

எங்கும் வீசும் பிணவாடை மறந்து தான்
சேலை சுகவாடை –
நுகர்கிறோமோ;

பிள்ளை பல எரிந்து கருகிய
சாம்பலில் தான் நீயும் நானும்
பொழுது போக்கிற்காய் பேசி நடக்கிறோமோ;

ஐயோ இறைவா.. ஈழப் பிணக் காடு
கண்டால் – நீ கூட உன்னை கல்லென்றே
கல்லெறிவாயோ?

கத்தி கதறி நில்லாது வடிந்து
பூமியை நனைக்கும் கண்ணீரில் ஒரு சொட்டுக் கூடவா –
உதவ இயன்றவர்களின் இதயம் தொடவில்லை?

உள்ளமெல்லாம் உப்புக் கரித்துப் போன
அந்த அழு குரல்களை மறந்த உன்னை நானும்;
என்னை நீயும் மனிதரென்று எப்படி எண்ணிக் கொள்கிறோம்?

கணக்கும் இதயம் உடைத்து
எத்தனை எழுதி என்ன செய்ய
என் கைகளை முறித்துக் கொள்ளவா எனக் கோபம் வருகிறதே;

பிஞ்சு குழந்தையின் நைந்து போன உடலும்
தாய்மை அருந்த உடலும்
மானம் துறந்து வானம் பார்க்கும் உயிரற்ற மனிதரின் நிர்வாணமும்
மூப்பு கருகிய பிண மேடும் வேறெங்கு காண கிடைக்கும்?

வா மனிதமே நீ எவர் மனிதிலேனும் –
இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பின்
எங்களை ஒருமுறை வந்து பார்க்க சொல் –
பார்த்து எங்களுக்கென்று ஒன்றும் செய்ய வேண்டாம் –

எஞ்சியவர்களையாவது காப்பாற்று!!
———————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக